
போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கொட, கொட்டிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 5 கிராம், 46 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 43 கிராம், 900 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருட்கள் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
