போட்டியின் போது திடீரென மைதானத்தில் விழுந்து உயிரிழந்த பயிற்றுவிப்பாளர்!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டியின் போது டாக்கா கபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் மஹ்பூப் அலி திடீரென மைதானத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்

இன்று சனிக்கிழமை சில்ஹெட்டில் இடம்பெற்ற ராஜ்ஷாஹி வாரியர்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் போது திடீரென மைதானத்தில் சரிந்து விழுந்த மஹ்பூப் அலி வைத்தியசாவைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்

59 வயதான மஹ்பூப் அலி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பயிற்றுவிப்பாளராக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு மஹ்பூப் அலி ஜாகியின் விலைமதிப்பற்ற பங்களிப்பு ஆழ்ந்த மரியாதை மற்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.