போக்குவரத்து பொலிசார் மீது மக்கள் ஆதங்கம்

-மஸ்கெலியா நிருபர்-

மஸ்கெலியா பொலிஸ் நிலையம் மற்றும் போக்குவரத்து பொலிசார் அதிகாரி இருந்தும் கடந்த பல மாதங்களாக சேவையில் ஈடுபடுவது இல்லை என்று நகர் வாழ் மக்களுக்கும் வாகன சாரதிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

நகரில் உள்ள சகல வீதிகளிலும் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் நுகர்வோர் பயணிக்க முடியாத நிலையில் உள்ளது.

அடிக்கடி வீதி தடை ஏற்படும் அபாயமும் உள்ளது இதனைத் தவிர்க்க மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து பொலிசார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து பொலிசார் என்று பெயர் அளவில் இருப்பது பயன் இல்லை என மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.