பொலிஸ் மாஅதிபரின் பெயரை பயன்படுத்தி வெளியான கடிதம் தொடர்பில் விசாரணை
பொலிஸ் மாஅதிபர், பிற சிரேஷ்ட அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் என பொய்யாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவும் ஒரு போலி கடிதம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர் .
போலியான பெயர்கள் மற்றும் கையொப்பங்களைக் கொண்ட இந்தக் கடிதம், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் வேண்டுமென்றே, பரப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்நிலையில், குறித்த ஆவணத்தை உருவாக்கிப் பகிர்ந்ததற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறியக் கணினி குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது