பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்: சந்தேக நபர் கைது

பதியத்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர் மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்