பொலிஸாரைத் தாக்கிய தந்தையும் மகனும்!
மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிடச் சென்ற உயிலங்குளம் பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்றை குறித்த வீட்டிலிருந்த தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட குழுவினர் தடிகளால் தாக்கியுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் உயிலங்குளம் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் ஜகத் குமார உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.அப்போது தந்தை மற்றும் மகன் உட்பட குழுவொன்று வீட்டிற்கு வந்த பொலிஸாரை பொல்லுகளால் தாக்கியதில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் காயமடைந்ததாக மன்னாரில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்திய தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட குழுவினரை கைது செய்ய பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்