பொருட்களை வாங்கும் முன் அவதானம்

இணையம் வாயிலாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது.

இணையத்தில் பொருட்களை வாங்குவதற்கு முன்னர், விற்பனையாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும், அவர்கள் குறித்த சரியான தகவல்களைப் பெற்ற பின்னரே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறும் SLCERT இன் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் நிரோஷ் ஆனந்த பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாக அனர்த்த நிவாரணங்கள் மற்றும் நிதி உதவிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி மேற்கொள்ளப்படும் புதிய வகை மோசடிகள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

பொருட்களை வாங்கும் போதும் அல்லது விற்கும் போதும் பொதுமக்கள் மிகவும் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.