பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பொதுநூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதச் செயற்திட்டத்தை முன்னிட்டு வீட்டு தோட்ட உற்பத்தியை மேம்படுத்தும் திட்டம் மற்றும் நூல்கள் அன்பளிப்பு பெறும் நிகழ்வும் இன்று புதன்கிழமை வாசகர் வட்டத்தலைவர் அ.புருஸோத்மன் தலைமையில் நடைபெற்றது.

கோட்டைக்கல்லாறு பொதுநூலக வாசகர் வட்டமானது பிரதேசத்தில் பல்வேறு பொதுநல திட்டங்களை செயற்படுத்திவருகின்றது. இதற்கமைய மக்கள் மத்தியில் வீட்டுத்தோட்ட உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்குகள், செயல்முறை பயிற்சிகளை நடத்திவருகின்றது. அத்துடன் நூலகத்திற்கான நூல்களை சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன் கலந்து கொண்டார். அத்தோடு பிரதி தவிசாளர் ரஞ்சினி கனகரெத்தினம், அதிபர் க.செல்வராசா, லண்டன் வைத்திய கலாநிதி நவரெத்தினம், லண்டன் சுதாகரன், சனசமுக உத்தியோகத்தர் குகனேசன், நூலகப்பொறுப்பாளர் வினோதா, நூலக உதவியாளர் தனஞ்சயன், உபதலைவர் சௌந்தரராசா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு வீட்டுத்தோட்ட உற்பத்தியளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்ட்டதுடன், லண்டன் வைத்திய கலாநிதி நவரெத்தினம், லண்டன் சுதாகரன் ஆகியோரால் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கோட்டைக்கல்லாறு பொதுநூலக வாசகர் வட்டத்தினால் மாணவர்கள் மத்தியில் பல்வேறு போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-கல்முனை  நிருபர்-

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group என்ற வட்டினை அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP