பேருந்து விபத்து : காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
கம்பஹா வத்துருகம பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த பேருந்தே இன்று செவ்வாய்கிழமை காலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கம்பஹா வைத்தியசாலையில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது 70 பயணிகள் பேருந்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகவேகம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்