பேருந்து மோதி ஒருவர் பலி!
மஸ்கெலியா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான என்.சி 0756 இலக்கம் கொண்ட பேருந்தில் மோதுண்டு படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலன் இன்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த ராமசாமி சுப்பிரமணியம் (வயது – 70) என்பவரே இவ்வாறு பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சடலம் இன்று செவ்வாய்கிழமை ஹட்டன் நீதிமன்ற நீதிபதி பணிப்புரையின்படி பதில் நீதவான் தமயந்தி பார்வையிட்ட பின்னர் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேருந்தும் பேருந்து சாரதியும் கைது செய்யப்பட்டு நாளை புதன்கிழமை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்