பேருந்தில் குளத்தை தேடி வந்து தற்கொலைசெய்து கொண்ட இளைஞன்

வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கார்மென் தோட்டப் பகுதியில் உள்ள பாரிய குளம் ஒன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 மணி அளவில் மீட்கப்பட்டள்ளது.

கார்மென்ட் தோட்டப் பகுதியை சேர்ந்த தோமஸ் செபஸ்டியன் (வயது – 22 ) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

குறித்த இளைஞன் பேருந்து ஒன்றில் வந்து குறித்த குளத்தில் பாய்ந்தததை பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர் கண்டு கூச்சலிட்டதை தொடர்ந்து பிரதேச மக்கள் குறித்த இளைஞனை காப்பாற்ற முயற்சி செய்த போதிலும் காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோத​னைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்