பேராதனை பல்கலை மாணவர்களை தாக்கியோர் கைது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழு மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் அஸ்கிரிய, கொத்தட்டுவ மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களில் மூவர் நேற்று திங்கட்கிழமை கிரிபத்கும்புர பகுதியில் கைது செய்யப்பட்டனர், மற்றைய நபர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

தாக்குதல் நடத்தப்பட்ட மாணவர்கள் வெலிஹிரிய பகுதியில் உள்ள ஒரு ஓயாவில் குளிக்கச் சென்றிருந்த நிலையில், அந்த இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த ஒரு குழுவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட மாணவர்களில் நான்கு பேர் தற்போது பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.