மட்டக்களப்பு பேத்தாழை விவேகானந்தா சனசமூக நிலையம் , பேத்தாழை பொது நூலகம் மற்றும் தாழை இளைஞர் விளையாட்டு கழகம் , வாழைச்சேனை விளையாட்டு கழகம், ஆலய நிர்வாக சபைகள் ஒன்றிணைந்து நடத்திய” மனித நேயம் காப்போம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகொடுப்போம்” எனும் தொனியில் நடத்திய வெள்ள அனர்த்த நிவாரண பொருட்கள் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஊடாக மாவட்ட செயலகத்திடம் கையளிக்கப்படது.
கடந்த பல நாட்களாக பேத்தாழை பொது நூலகத்திற்கு முன்னால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும், இன்று சனிக்கிழமை மாவட்ட செயலக கணக்காளர் மற்றும் கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் முன்னிலையில், மாவட்ட செயலகத்தில் உத்தியோகஸ்தர்களிடம் வழங்கப்பட்டதுடன், இப் பொருட்களை மலையக மக்களுக்கு வழங்குமாறும் அரச அதிகாரிகளிடம் கூறப்பட்டது.


