மூதூர் பெரண்டினா  நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலவச கருத்தரங்கு

-மூதூர் நிருபர் –

பெரண்டினா  நிறுவனத்தின் ஏற்பாட்டில் 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

பெரண்டினா நிறுவனத்தின் சேருநுவர கிளையின் முகாமையாளர் கிரிஷ்ணகுமார் ருபேசன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கு திருகோணமலை – சேருநுவர -சோமாதேவி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இவ் இலவச கருத்தரங்களில் 5 ஆ தரப் புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள 130 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நன்மையடைந்தனர்.

இந்நிகழ்வில் பௌத்த மதகுருவான சிறி விமல கிமி கலந்து கொண்டு ஆசியுரை வழங்கிருந்தனர். அத்தோடு மாணவர்களுக்கான கருத்தரங்கினை பீ.அமில நிரோசன மிகச்சிறப்பாகச் செய்திருந்தார்.

இவ் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் மஹாவலி கம வித்தியாலய அதிபர் எஸ்.சஜீவனி தமயந்தி, சோமாதேவி வித்தியாலய ஆசிரியர் எச்.எச்.ஏ.தனஞ்சய மற்றும் பெரண்டினா நிறுவனத்தின் நுண்நிதி அதிகாரி சுஜீவ சம்பத், மாவட்ட இளைஞர் அபிவிருத்தி இணைப்பாளர் சுதன், கணக்கீட்டு அதிகாரி ஆனந்தபவன் உள்ளிட்டோரும் கலந்த சிறப்பித்தனர்.

பெரண்டினா நிறுவனமானது மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கல், கா.பொ.த உயர்தர மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பணவுகள் வழங்கல்,பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்குதல் உள்ளட்ட பல்வேறு நலத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.