
பெயர் சூட்டும் நிகழ்வில் நடந்த துயரம்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தை உயிரிழப்பு
தூத்துக்குடியில் குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வின் போது வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்ததில் 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
குறித்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு எதிர்வீட்டைச் சேர்ந்த பெண்ணின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரிக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடந்த இந்த துயரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
