பெண்கள் ஏன் கால் மேல் கால் போட்டு உட்காருகிறார்கள்?
பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காருவதுஇ மேலைநாடுகளில் அவர்களுடைய ஆடை கலாச்சாரத்தினால் ஏற்பட்ட பழக்கமாக இருக்கலாம். ஆனாலும் பெண்கள் அவ்வாறு அமர்வதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.
ஆனால் இப்பொழுது பெண்கள் பாடசாலைப்பருவத்தில் இருந்தே நாற்காலியில் அமர வைக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களுடைய இடுப்பெலும்பு பலம் குறைந்ததாக ஆகிறது. பருவ வயது எட்டும் பொழுது அவர்களுடைய இடுப்பெலும்பு மேலும் இலகும் தன்மை அடைகிறது.
முன்னாளில், இடுப்பு எலும்புகள் வலுவடைய பெண் குழந்தைகளுக்கு சில சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டது. ஆனால் இக்காலத்தில் பெண்கள் சிறப்பு உணவுகளை உண்பதில்லை. அதனால் நீண்ட நேரம் இருக்கையில் அமர்வதற்கு சிரமப்படுகிறார்கள்.
நேராக ஒரு நாற்காலியில் சில மணி நேரம் உட்கார்ந்து இருந்தாலே, தோள்பட்டையும் இடுப்பும் தொய்வு அடைந்து வலியால் சிரமப்படுகிறார்கள். மேலும் அமர்ந்திருக்கும் நேரம் அதிகமாகும் பட்சத்தில் அவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்கிறார்கள்.
அதனால் அவர்களுக்கு இடுப்பு வலி சிறிது குறைவாகவும்இ இடுப்பு எலும்புக்கு நாற்காலியின் சாய்வு பகுதியில் அரவணைப்பு கிடைத்தது போலவும் உணருகிறார்கள்.
பெரும்பான்மை பெண்கள் கால் மேல் காலிட்டு அமர்வதற்கு அவர்களின் முதுகெலும்பு பலவீனமாக இருப்பதுவும் காரணம். உடல் சோர்வடையும் பொழுது மனதும் தளர்கிறது. கால்மேல் காலிட்டு அமரும் பொழுது உடல் சமநிலைபடுவதால் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. சரியான உணவு எடுத்துக் கொண்டால் முதுகெலும்பை பலப்படுத்தலாம்.
இன்னும் சில காரணங்கள் :
உட்கார்ந்திருக்கும் நாற்காலியில் கைப்பிடி இல்லாதபட்சத்தில் கைகளுக்கு முட்டுக் கொடுத்து தோள்பட்டையை தாங்குவதற்கு கால் மேல் கால் போட்டு இவ்வாறு அமரலாம்.
மேசை இல்லாத போது மடிக்கணினி பயன்பாட்டுக்காக கால் மேல் கால் இட்டு அமரலாம்.
இயற்கையான ஒரு பாறையின் மேல் அமர்ந்து புகைப்படம் எடுக்க விரும்புகையில்இ தன்னுடைய உடல் எடையை சமமாக வைத்துக்கொள்ள கால்மேல் காலிட்டு அமரலாம்.
எனவே, பெண் ஒருவர் கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்தால், அவர்களைப் பற்றி விமர்சிக்கும் முன், நான் சொன்ன காரணங்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்