பெண்களுக்கு எதிராக வீடியோ வெளியிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை

சமூக சீர்கேடுகளுடன் தொடர்புடைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் பொமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெண்களைத் தாக்குவது மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்