
பெண் ஒருவருக்கு நேர்ந்த சோகம்
மஹாஓயா – பெரகல வனப்பகுதியில் உள்ள ஒரு வீதிக்கு அருகில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
உடலமாக மீட்கப்பட்ட பெண் வராபிட்டியவைச் சேர்ந்த 46 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கால்நடைகளைக் கட்டுவதற்காக வனப்பகுதிக்குச் சென்றிருந்த நிலையில், அவர் வீடு திரும்பாததால், அப்பகுதி மக்களும் உள்ளூர்வாசிகளும் இணைந்து நடத்திய தேடுதலின் போது உடலம் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த பெண் உடலமாக மீட்கப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மஹாஓயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
