புத்தளம் முந்தல் பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

புத்தளம் – முந்தல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

முந்தல் பகுதியை சேர்ந்த 52 மற்றும் 55 வயதுடைய இருவரே உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

 

இவர்கள் இருவரும் தமது குடியிருப்புக்கு அருகில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த நிலையில், அதற்கு வீட்டிலிருந்து கம்பி மூலம் மின்சாரத்தைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அந்த கம்பியில் ஏற்பட்ட தவறை சரிசெய்வதற்கு முற்பட்ட கணவரை மின்சாரம் தாக்கிய நிலையில் அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்த மனைவியும் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து பிரதேச மக்கள் இருவரையும் மீட்டு முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.