புதையல் தோண்டிய இருவர் கைது!

புத்தளம் நவகத்தேகம – நன்னேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுனுகோல் பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் நன்னேரிய பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்னேரிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மஹா நன்னேரிய மற்றும் கிரிவனாகெட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சில பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை நன்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.