புதையல் தோண்டிய ஆறு பேர் கைது

-பதுளை நிருபர்-

 

கலஉட 13ம் கட்டை கொஸ்கொல்ல ஒய பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக கலஉட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது 6 சந்தேக நபர்களையும் முச்சக்கரவண்டி ஒன்றினையும் , 02 மோட்டார் சைக்கிள்கள், வாள் ஒன்று மற்றும் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் நேற்று மாலை கலஉட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை, வெள்ளவாய, பண்டாரவளை, ஹாலிஎல, கலஉட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரதான சந்தேக நபர் 71 வயதுடையவர் எனவும் ஏனையவர்கள் 47-55 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

13 கட்டை கொஸ்கொல்ல பிரதேசத்தில் சிலர் புதையல் தோண்டுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் முச்சக்கர வண்டி மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களுக்கு மேலதிகமாக கத்தி ,அலவாங்கு, மண் அகழும் கூடைகள், விளக்குகள், வகைகள்,மஞ்சள் தூள், பூக்கள், மாலைகள், தீப்பெட்டிகள் மற்றும் ஏராளமான பூஜைப் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்