புதையல் தேடி அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

கிராந்துருகோட்டை பகுதியில் நேற்று திங்கட்கிழமை புதையல் பொருட்களைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கிராந்துருகோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராந்துருகோட்டை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29 மற்றும் 38 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்