பிள்ளையான், வியாழேந்திரனுக்கு நடந்துகொண்டிருப்பது, நாளை டக்கிளசுக்கு நடப்பது உங்களுக்கும் நடக்கும்: சுகாஸ்

பிள்ளையானும், வியாழேந்திரனும் கம்பி எண்ணியும் இன்னும் சிலர் இங்கும் திருந்தவில்லை அங்கும் திருந்தவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் களுவன்கேணியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவை என்பன இணைந்து சைக்கிள் சின்னத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறிகாந்தா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி சுகாஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய சட்டத்தரணி சுகாஸ் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மக்கள் வீரர்கள், ஆனால் அந்த மண்ணில் இடையிலே வந்த புல்லுருவிகளும், பதவிகளுக்கு விலை போனவர்களும் தமிழ் தேசியத்தை அடகு வைத்தவர்களும் எமது மண்ணை காட்டிக்கொடுத்திருந்தார்கள்.

மேலதிக விபரங்களுக்கு வீடியோ இணைப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்