
பிள்ளையான் ஒரு சிறுவர் போராளி – கிட்ணன் செல்வராஜ்
தற்போது கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் போன்றோர் கிழக்கு மாகாணத்துக்காக எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றில் கருத்துரைத்த அவர், கடந்த காலங்களில் பல தமிழ் புத்திஜீவிகள் காணாமல் போன சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாகக் கருதி பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பிள்ளையான் என்பவர் 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துக் கொண்ட ஒரு சிறுவர் போராளி என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
பின்னர் ரணில், ராஜபக்ச ஆகியோருடன் இணைந்து பல கடத்தல் குற்றச்சாட்டுகளிலும் பலர் காணாமல் போவதற்குப் பிரதான சூத்திரதாரியாகவும் செயற்பட்டுள்ளார் என கிட்ணன் செல்வராஜ் குற்றம் சுமத்தினார்.
பிள்ளையான் போன்றோருக்கு சமூகம் சார்ந்த தெளிவும் கண்ணோட்டமும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் குறிப்பிட்டார்.