பிள்ளைகளை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய கிராம உத்தியோகத்தர் கைது
ஹோமாகம – பிட்டிபன பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவரை அச்சுறுத்தி 20 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தசம்பவத்தில், ஹோமாகம பகுதியைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் ஒருவரே நுகேகொடை குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது மூன்று பிள்ளைகளையும் கொலை செய்து விடுவதாக தம்மை அச்சுறுத்தி நபர் ஒருவர் கப்பம் கோரியதாக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் குறித்த முன்பள்ளி ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
-
</ul >