-யாழ் நிருபர்-
யாழ்.பருத்தித்துறை நகரசபையின் தண்ணீர் வண்டி இன்று சனிக்கிழமை காலை 11:30 மணியளவில் பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதியில் தடம் புரண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்றையதினம் பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான தண்ணீர் வண்டியானது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்காக புறப்பட்டது.
அந்த வண்டி பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதி வழியாக செல்லும் போது சக்கரம் முன்பாகவும் வண்டி புறமாகவும் தடம் புரண்டது.
அந்த நேரம் அந்த வீதி வழியாக மக்கள் பயணிக்காததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.





