
பிரதமர் ஹரிணி – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இருவருக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று திங்கட்கிழமை இலங்கையை வந்தடைந்த நிலையில், இரு நாட்டு உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து இந்தச் சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட கடிதத்தையும் அவர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
