
பார்டர் கவாஸ்கர் சாதனையை முறியடித்த ஆஷஸ் தொடர்
சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, அவுஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
முதல் இன்னிங்ஸில் 384 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 342 ஓட்டங்களும் எடுத்தது.
முதல் இன்னிங்ஸில் 567 ஓட்டங்களைக் குவித்த அவுஸ்திரேலியா, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஏற்கனவே ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்திருந்த அவுஸ்திரேலியா, இப்போட்டியின் வெற்றியின் மூலம் 4-1 எனத் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரை நேரில் காண மொத்தமாக 8,59,580 ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.
இதன் மூலம், கடந்த ஆண்டு இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மோதிய பார்டர் – கவாஸ்கர் தொடரின் சாதனையான 8,37,879 என்ற வருகைப் பதிவை ஆஷஸ் தொடர் முறியடித்துள்ளது.
