நாட்டில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்களை வேலையற்ற சித்த ஆயுள்வேத மருத்துவர்கள் கடந்த சில நாட்களாக நடத்திவருகின்றனர்.
இவர்கள் அரச சேவையில் இல்லாத போதுதிலும், ஒருபுறம் தங்களது தொழிலுரிமைக்காக போராடிவரும் நிலையில், நாட்டின் நிலை கண்டு களத்தில் இறங்கி மருத்துவ முகாம்களை நிறுவி தங்களது சொந்த செலவில் இரவு பகலாக சேவையாற்றி வருவதை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பசறை யூரி எனும் இடத்தில் 3 மருத்துவ முகாம்களை நடத்தி இருந்ததுடன், சுமார் 1500 க்கு மேற்பட்ட மக்கள் இங்கு மருத்துவ சேவையினை பெற்றுக்கொண்டதுடன், இன்று சனிக்கிழமை பல்லேகட்டுவயில் மருத்துவ முகாம் நடத்துகின்றனர்
அத்தோடு நாளை, நாளைமறுதினம் இவ்வாறு தொடர்ச்சியாக ஊவா மாகாணத்திலும் மருத்துவ முகாம்களை நடத்த வேலையற்ற சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்திலும் வேலையற்ற சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் தங்களது சேவையினை விரிவுபடுத்தி உள்ளதுடன், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் விழிப்புணர்வு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன், அடுத்த வாரமளவில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் வைத்திய விழிப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அவ் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.



