பாடசாலை வகுப்பறைக் கட்டிட நிர்மாண வேலைகள் ஆரம்பம் – தௌபீக் எம்.பி ஆரம்பித்து வைப்பு
தம்பலகாமம் தாயிப் முஸ்லிம் வித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேவையான வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த குறையை நிவர்த்தி செய்யும் முகமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் கட்டிட நிர்மாண வேலைகள் இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளர் நிவாஸ்இ முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இமாம் ஆசிரியர்இ பாடசாலை அதிபர் கஸிருள்ளா உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்