பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு கொக்குவில் பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆணின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மைக்கல் என்று அழைக்கப்படுவதாகவும் இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்தபகுதி பொது கட்டிடங்களான சந்தை மற்றும் பஸ்தரிப்பிட கட்டிடங்களில் தங்கி வாழ்ந்து வருதாகவும் இவர் தொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவில்லை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்