பளு தூக்குதல் போட்டியில் பதக்கங்களை குவித்த யாழ் பல்கலைக்கழக அணி

-யாழ் நிருபர்-

பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான  14 ஆவது  மினி ஒலிம்பிக்  போட்டியில்  யாழ்ப்பாண பல்கலைக்கழக பெண்கள்  பளுதூக்கு அணி 5 தங்கம் ,2 வெள்ளி, 1வெண்கல பதக்கங்களை  பெற்று  இவ்வருட  சம்பியன் பட்டத்தை  பெற்றுக்கொண்டது.  இவ்வருடமே  முதன் முதலாக பெண்கள் பளுதுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

1. என்.மிதுசா 49 கிலோ கிராம்எடை பிரிவில் 90  கிலோ கிராம் எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்

2. கே. சனுஜா 49 கிலோ கிராம் எடை பிரிவில் 71 கிலோ கிராம் எடையினை தூக்கி வெள்ளி பதக்கதினை பெற்றார்

3. எச்.ஏ.ஐ.என் ரத்ன நாயக்க 55 கிலோ கிராம் எடை பிரிவில் 100 கிலோ கிராம் எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்

4. ஜே. பஜினா 64 கிலோ கிராம் எடை பிரிவில் 120 கிலோ கிராம் எடையினை தூக்கி வெள்ளி பதக்கதினை பெற்றார்

5. ஆர்.தசாந்தினி 76 கிலோ கிராம் எடை பிரிவில் 110 கிலோ கிராம் எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்<

6. ஆர்.தக்சாயினி 81கிலோ கிராம் எடை பிரிவில் 100 கிலோ கிராம் எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்

7.டி.எம்.டி.எம்.தனபால 87 கிலோ கிராம் எடை பிரிவில் 79 கிலோ கிராம் எடையினை தூக்கி வெண்கல பதக்கதினை பெற்றார்

8.எஸ்.ஜீவமலர் +87 கிலோ கிராம் எடை பிரிவில் 80 கிலோ கிராம் எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்.

ஆண்கள் பளுதுக்கள் பிரிவில் ரி. நர்மதன் 89 கிலோ கிராம் எடை பிரிவில் 195 கிலோ கிராம் எடையினை தூக்கி தங்க பதக்கத்தினை பெற்று கொண்டார்.