பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவு!
பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அந்த சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் புதிய செயலாளராக கலாநிதி அதுலசிரி சமரகோன் தெரிவாகியுள்ளார்.
முன்னதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவராக ஷியாம் பன்னேஹெக்க பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்