பனை வெல்லம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக விதாதா பிரிவின் ஏற்பாட்டில்  பனை வெல்லம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி  வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் த. ஜெயசீலன் அவர்களின் தலைமையில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் முல்லையடியில் அமைந்துள்ள பனை வெல்லம் உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்றது.

இதன் வளவாளராக பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் வளவாளர் தி.குணபாலசிங்கம்  கலந்து கொண்டதுடன் 20 பயனாளிகளும் பயன்பெற்றனர்.