பனிப்புலம் அல்லாத புகை மண்டலம் பரவும் அபாயம்!
மழை, வெள்ளம், மண்சரிவுக்கு மத்தியில் மலை நாட்டில் விஷப்புகையும் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹற்றன், நுவரெலியா, மஸ்கெலியா, நோட்டன் பிரிஜ், கினிஹத்ஹேன ஆகிய மலையகப் பகுதிகளில் பனிப்புலம் அல்லாத புகை மண்டலம் படர்ந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து இந்நிலைமை தொடர்வதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.