பனங்கற்கண்டு பயன்கள்

பனங்கற்கண்டு பயன்கள்

பனங்கற்கண்டு பயன்கள்

🟫பொதுவாக சீனி எனப்படும் வெள்ளைச் சர்க்கரையுடன் ஒப்பிடும்போது. நாட்டுச் சர்க்கரை நல்லது என்பதை நாம் அறிவோம். அதையும் தாண்டி, பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனங்கற்கண்டு, அனேக நன்மைகளை அளிக்கிறது. அதுகுறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

📍பனங்கற்கண்டில் உள்ள மெக்னீசியம், LDGR அழுத்தத்தைக் குறைக்கவும், தளர்வு உணர்ளை ஊக்குவிக்கவும் உதவும் ஒரு தாதுப்பொருளாகும். அந்த வகையில் பனங்கற்கண்டை மன அழுத்தத்தை தடுக்கு மருந்து எனலாம்.

📍பனங்கற்கண்டில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. அவை சரும சேதத்தை ஏற்படுத்தும் தீவிர மூலக்கூறுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. வைட்டமின் இ சத்து நிறைந்ததாக பனங்கற்கண்டு உள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக வயதான தோற்றத்தைக் குறைக்கவும் உதவும் ஒரு ஆக்சிஜனேற்றியாக விளங்குகிறது.

📍பனங்கற்ண்டில் கால்சியம், மெக்னீசியம் அதிகம் உள்ளன. இவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு அவசியம், பால் புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகவும் பனங்கற்கண்டு உள்ளது. இவை நமது எலும்பு அடர்த்தியை பராமரிக்க உதவுகின்றன.

📍 பனங்கற்கண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை ஒழுங்குபடுத்தவும். மலச்சிக்கலை தடுக்கவும் உதவு கிறது. ‘புரோபயாட்டிக்’கின் சிறந்த ஆதாரமாக பனங்கற்கண்டு உள்ளது. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

📍பனங்கற்கண்டில் இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன. வைட்டமின் ஏசி ஆகியவற்றையும் பனங்கற்கண்டு கொண்டிருக்கிறது’ இவை தொற்று நோய்களுக்கு எதிராகப் போராட உதவும் ஆக்சிஜனேற்றிகள் ஆகும்.

📍இருமலுக்கான சிறந்த நிவாரணியாக இருக்கும் பனங்கற்கண்டு தொண்டை கரகரப்பை போக்கி, சளியை வெளியேற்றுகிறது. பனங்கற்கண்டை வெறுமனே வாயில் போட்டு மென்று உமிழ்ந்தாலே பலன்களை பெறலாம்.

📍எப்போதும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு உள்ளவர்கள் அரை டேபிள் ஸ்பூன் பசு நெய்யுடன் சிறிது அளவு பனங்கற்கண்டு, நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் சுற்றுப்பாக மாறிவிடுவார்கள்.

📍பனங்கற்கண்டு இயற்கை வயாக்ரா என்று அழைக்கப்படுகிறது. இதை பாலில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தியானது அதிகரிக்கும்.

📍மெலிந்த உடல் இருக்கும் குழந்தைகளுக்கு பனங்கற்கண்டு கொடுப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.

📍பனங்கற்கண்டு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வாயில் மென்று சாப்பிட்டா் வாயில் இருக்கும் துர்நாற்றம் காணமல் போயிவிடும். அத்துடன் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களையும் அழித்துவிடும்.

📍பனங்கற்கண்டு, பாதாம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து இரவு படுப்பதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் நினைவாற்றால், கண்பார்வை அதிகரிக்கும்.

📍இரண்டு டேபிள் வெங்காய சாறு, ஒரு டேபிள் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் பிரச்னை சரியாகும்.

📍சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை விரட்டும் தன்மையை கொண்டிருக்கும் பனங்கற்கண்டு பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலு சேர்க்கிறது. ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்கிறது.

📍இருதயம் தொடர்பான நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டதாக பனங்கற்கண்டு உள்ளது. இதை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் இருதயம் ஆரோக்கியமானது வலுப்படுகிறது.

பனங்கற்கண்டு பயன்கள்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்