பதுளை புகையிரத நிலையத்தினுள் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

பதுளை புகையிரத நிலையத்தினுள் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை புகையிரத நிலையத்தினுள் ஐஸ் போதைப் பொருளை தன் கைவசம் வைத்திருப்பதாக பதுளை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய,  உடன் புகையிரத நிலையத்திற்கு சென்று சந்தேகத்துக்குரிய நபரை சோதனைக்கு உட்படுத்தினர்.

சோதனைக்கு உட்படுத்திய நபரிடம் இருந்து 110மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிசருஉயன, பேஸ்லைன் வீதி, கொழும்பு 8 பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்