
பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்பு
பண்டிகை காலத்தில் ஏற்படக்கூடிய மோசடியை தடுப்பதற்காக விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை முதல் ஜனவரி 15ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் அந்தக் காலப்பகுதியில் விசேட சோதனைகளை மேற்கொள்வார்கள் என்பதுடன், நுகர்வோர் முறைப்பாடுகள் இருப்பின், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அந்த அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதிலும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் சுற்றிவளைப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி நுகர்வோர் அதிகமாகக் கொள்வனவு செய்யும் ஆடைகள், நீடித்து நிலைத்திருக்கும் பொருட்கள், மின் உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நடைபாதை வியாபாரிகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களையும் நுகர்வோர் அதிகார சபை கண்காணிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
