மட்டு நகரில் பணியின் பின் வீடு சென்ற இளைஞனிடம் பணம் பறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

மட்டக்களப்பு பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு பிரபல உணவு விடுதி ஒன்றில் பணி புரியும் இளைஞன் பணிகளை முடித்து விட்டு வீடு திரும்பும் போது இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த ஏறாவூர் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவர் குறித்த இளைஞனை முறையற்ற விதத்தில் கைது செய்து அவரிடம் இருந்த 6500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் கான்ஸ்டபில் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்,  மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்