பசறை வெல்கொல்ல பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்பு
-பதுளை நிருபர்-
பசறை வெல்கொல்ல பகுதியில் விஷேட அதிரடிப் படையினரால் துப்பாக்கி ஒன்று மீட்டுள்ளது
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெல்கொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கி (shot gun) ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் குறித்த வீட்டை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது வீட்டினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை (shot gun) மீட்டுள்ளது.
இதன்போது 35 வயதுடைய வெல்கொல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கியையும், குறித்த சந்தேக நபரையும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேக நபரை இன்று திங்கட்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.