பங்களாதேஷ் அணி 8 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி
ஆசிய கிண்ண T20 தொடரின் பிரிவு B-இல் நேற்று ( 16) அபுதாபியில் உள்ள ஷேக் ஸயீத் மைதானத்தில் நடைபெற்ற 9ஆவது போட்டியில், பங்களாதேஷ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
போட்டியில் பங்களாதேஷ் அணித்தலைவர் லிட்டன் தாஸ் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 154/5 ஓட்டங்களைப் பெற்றது.
அணி சார்பில் தன்சிட் ஹசன் தமிம் 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான் (2/26) மற்றும் நூர் அகமது (2/23) தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 146/10 ஓட்டங்களைப் பெற்று 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் 35 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
பங்களாதேஷ் பந்து வீச்சில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 28 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றி, பங்களாதேஷ் அணியின் சூப்பர் 4-இல் முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்பித்துள்ளது. இலங்கைக்கு எதிரான முந்தைய தோல்வியால் அவர்களின் நிகர ஓட்ட வீதம் (NRR) பாதிக்கப்பட்டிருந்தது.