நோயாளர் ஒருவர் வெட்டிக் கொலை: இரு சந்தேக நபர்கள் கைது
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சி, விஹாரை பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய ஒருவரும், மதவாச்சி, கோனா கும்பக்கொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரிடமும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கொலையின் போது அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், கையடக்கத் தொலைபேசி, மற்றும் சிம் அட்டை என்பனவற்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக நடவடிக்கைகள் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்