நுவரெலியாவில் பெய்து வரும் மழையால் பாதிப்பு

-மஸ்கெலியா நிருபர்-

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக சிவனொளி பாத மலை உச்சியில் இருந்து படிக்கட்டுகள் வழியாக அதிக அளவில் மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தற்போது வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிக அளவில் சூரிய உதயம் பார்க்க நல்லிரவு வேலையில் சிவனடி பாத மலைக்கு சென்று அதிகாலையில் சூரிய உதயம் பார்ப்பது வழக்கம்.

இருந்த போதிலும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகள் நாளாந்தம் சிவனடி பாத மலைக்கு சென்று வருகின்றனர்.அவ்வாறு மலைக்கு செல்லும் போது கன மழை பெய்யும் பட்சத்தில் மலைக்கு செல்ல வேண்டாம் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் பணிப்புரை வழங்கி வருகின்றனர்.

மேலும் மலைப்பகுதியில் உள்ள அனைத்து காட்டாறுகளும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.

நீராட செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றனர்.

பண்டிகை காலம் என்பதால் இப் பகுதியில் உள்ள நீர் தேக்கங்கள் மற்றும் நீர் வீழ்ச்சி பகுதியில் நீராடுவது தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ள படுகின்றனர்.

இன்று மதியம் முதல் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கன மழை பெய்தது வருகிறது இதன் காரணமாக நீர் தேக்க பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.அதிகளவில் பணி மூட்டம் காணப் படுவதால் வாகன சாரதிகள் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.