நீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

உடப்பு முதலாம் வட்டார பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர் புளிச்சாக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 12ந் தரத்தில் கல்வி கற்கும் சண்முகம் கேதிஷா என்ற (வயது – 17) மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் வேளை சக தோழிகளுடன் நீராடிக்கொண்டிருந்த போது திடிரென குளத்தில் ஆழமான பகுதியில் மூழ்கவே அயலவர்களினால் நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர், எனினும் குறித்த மாணவியை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்