நிவாரணப் பணிகளுக்காக உலக நாடுகள் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு

திக்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவை அடுத்து இலங்கைக்கு தொடர்ந்து சர்வதேச மனிதாபிமான ஆதரவு கிடைத்து வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதால், நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் ஒற்றுமையை வெளிப்படுத்தி அவசரகால நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

உடனடி அவசரகால மீட்பு முயற்சிகளில் இந்தியா முன்னணிப் பங்காற்றியுள்ளது. அத்துடன் இந்திய கடற்படை மற்றும் வான் படைகள் ஏற்கனவே அவசரகால பொருள்களை வழங்கியுள்ளன, மேலும் மேலதிக பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

உலக உணவுத் திட்டம், அமெரிக்கா, சீனா, ரஷ்யா என்பனவும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளன ..