
நிவாரண பொருட்களை மாவட்டச் செயலகம் ஊடாக வழங்க முடியும் – அரசாங்க அதிபர்
-யாழ் நிருபர்-
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை மாவட்டச் செயலகம் ஊடாக வழங்கமுடியும் – அரசாங்க அதிபர்!
அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க விரும்பினால், மாவட்ட செயலகத்தில் பொருட்களை கையேற்கும் கரும்பீடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பொறுப்பாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடலிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனர்த்த நிவாரணம் மேற்கொள்ள வழங்க முன்வருவோர் தாம் வழங்கவிருக்கும் பொருட்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் பொருட்கள் தொடர்பான விபரங்களையும் குறிப்பிட்டு குறித்த மாவட்ட செயலக கருமபீடத்தில் ஒப்படைக்கலாம் எனவும், உரிய பதிவுகளுடன் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என மேலும் தெரிவித்தார்.
