நிவாரண கொடுப்பனவில் முறைகேடு – தலவாக்கலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

-பதுளை நிருபர்-

 

அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தலவாக்கலையில் இன்று புதன்கிழமை முற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

தகுதி இருந்தும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த பலரும் அத்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்றும், தாம் ஏமாற்றம் அடைந்ததாக கூறுவதுடன் தமது மன ஆதங்கத்தை கோசங்களாக வெளிப்படுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்