“நிலைபேறான மாற்றம்” என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினம்
வடமாகாண சுற்றுலாப்பணியகமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நிலைபேறான மாற்றம் என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினத்தினை சிறப்பாக முன்னெடுத்திருந்தன.
இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி காக்காகடை சந்தியிலிருந்து பண்பாட்டு பவனியுடன் கோலாகலமாக தொடங்கப்பட்ட நிகழ்வு பசுமைப்பூங்காவில் அதிதிகளின் வரவுடன் சிறப்பாக நடைபெற்றது.
வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களும் கெளரவ விருந்தினராக
ஏ. வேலமாலிகிதன் தவிசாளர் கரைச்சி பிரதேச சபை அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாயினி இன்பராஜ் ,
திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன்,கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் ,பூநகரி பிரதேச செயலாளர் வி.ஆயகுலன்,பி.சத்தியராகவன்
உள்ளூராட்சி உதவி ஆணையர் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையர் அலுவலகம் கிளிநொச்சி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர்.
அதிதிகளுடன் வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் வை.யசோதா,உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள், கரைச்சி பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள், துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் இளம் முதலீட்டாளர்கள்,சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள்,ஏற்றுமதியாளர்கள், கலைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.