நில அளவை வரைபடங்களை இன்று முதல் வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை
இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இன்று முதல் இணைவழியில் பணம் செலுத்தி நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும் என நில அளவையாளர் நாயகம் வை.ஜீ.ஞானதிலக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதுவரை, தங்கள் அலுவலகம் மூலம் பொதுமக்களுக்கு நில அளவை வரைபடங்களை வழங்கி வந்தோம்என்றும் இருப்பினும் இப்போது பொதுமக்களுக்கு நில அளவை வரைபடங்களை இணையவழியில் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளோம்என்றும் அவர் குறிப்பிட்டார் .
இணையவழி ஊடாக பணம் செலுத்தி, தங்களுக்குத் தேவையான நிள அளவை வரைபடங்களை தங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும்என நில அளவையாளர் நாயகம் வை.ஜீ.ஞானதிலக்ககுறிப்பிட்டுள்ளார் .