நியூசிலாந்து மகளிர் அணிக்கு 259 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை மகளிர் அணியின் சார்பில் நிலக்ஷிகா சில்வா அதிகபட்சமாக 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் நியுசிலாந்து மகளிர் அணிக்கு 259 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.